<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 12 May 2021

BSNL ஊழியர் சங்கம் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலம் 

தேதி : 10.05.2021 


அன்புத் தோழர்களே. 

                    இரண்டு சங்கங்களின் இணைந்த மாநில செயற்குழு கூட்டம் 07.05.2021 மற்றும் 08.05.2021 ஆகிய இரண்டு தினங்களில் மண்டலம் வாரியாக தனித்தனியாக மூன்று கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. 

                28.04.2021 தேதியில் வெளியான நீதிமன்ற தீர்ப்பும் அதை ஒட்டி நமது கடமைகளும் என்பவை ஆய்படு பொருட்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. BSNLEU மாநிலச் செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் BSNLEU மாநிலத் தலைவர் மற்றும் அகில இந்திய உதவிப்பொதுச் செயலர் தோழர் S. செல்லப்பா TNTCWU தலைவர் தோழர் C. பழனிச்சாமி, TNTCWU மாநிலச் செயலர் தோழர் C. வினோத்குமார் ஆகியோர் உட்பட பெரும்பாலான மாவட்ட செயலர்களும் மாநிலச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

               சமீபத்தில் மரணமடைந்த சென்னை மாநில BSNLEU முன்னாள் மாநிலச் செயலர் தோழர் கன்னியப்பன், வேலூர் AIBDPA மாவட்ட செயலர் தோழர் ஜோதி சுதந்திர நாதன், தர்மபுரி முன்னாள் TNTCWU மாவட்ட செயலர் தோழர் கஜபதி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்து. 

                  28.04.2021 சென்னை உயர் நீதி மன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தோழர் C. வினோத்குமாரும் தோழர் C. பழனிச்சாமியும் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணனும் விளக்கி பேசினார்கள். இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கம் இது வரை பெற்றிடாத வெற்றி என்று மனமார பாராட்டினார்கள். சம்பள வழங்கிய மத்திய லேபர் அதிகாரியே நீதி மன்றத்தில் சமர்ப்பித்த தன்னுடைய அறிக்கையில் இந்தியாவில் எந்த ஒரு லேபர் அதிகாரிக்கும் கிடைக்காத பொறுப்பு, தனக்கு வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 5,000 ஒப்பந்த தொழிலாளர்களின் இல்லங்களில் தீபத்தை ஏற்றி வைத்ததாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இது நமது சங்கத்தின் சாதனையை எடுத்துரைப்பதாகவே உள்ளது.

BSNL நிறுவனம், நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளுக்கு இணங்க மொத்தம் 35.40 கோடி ரூபாயை, லேபர் அதிகாரிகள் கணக்கில் செலுத்தியுள்ளது. இதில் 4,759 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 32,07,51,841 ரூபாய் சம்பள நிலுவையாக இதுவரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வழங்கப்படாத 543 ஒப்பந்த தொழிலாளர்களுக்காக ரூபாய் 2,86,99,127 ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள தொகையான ரூபாய் 45,58,776-யை இதுவரை சம்பள நிலுவை அனுமதிக்கப் படாதவர்களுக்கும், சம்பள நிலுவை குறைவாக பெற்றவர்களுக்கும் சரி பார்த்து பின்னர் வழங்கப்படும் என்ற தகவல்களை தெரிவித்தார்கள். வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட வழக்கறிஞர் திரு N.G.R பிரசாத் மற்றும் அவரது குழுவினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்

 தீர்ப்பையொட்டி கீழ்க்கண்ட கடமைகளை செய்திட வேண்டும் என்று நீண்ட விவாதத்திற்குப் பின்னர் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

1. விடுபட்ட 543 ஒப்பந்த தொழிலாளர்களின் விவரங்களை மறுபடியும் சேகரித்து மாவட்ட நிர்வாகங்கள் / மாநில நிர்வாகம் மூலமாக மத்திய லேபர் அதிகாரிக்கு உடனடியாக அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அனுப்பிய வங்கி விவரங்களை ஆய்வு செய்து அதில் ஏற்பட்ட தவறு மறுபடியும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. தற்போது வழக்கு பட்டியலில் இருந்த போதும் தொகை அனுமதிக்க படாதவர்களின் பட்டியல், குறைவாக சம்பளம் பெற்றவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் தயார் செய்து மாவட்ட சங்கங்கள் மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

3. அதே போல் கள ஆய்வு செய்யப்படாதவர்கள் பட்டியல் / மறைந்த ஒப்பந்த தொழிலாளர்களின் வாரிசு மற்றும் அவர்களின் சம்பள பாக்கி பட்டியல் போன்றவறறைகளையும் மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்

4. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களின் EPF, ESI கணக்கு விவர பட்டியலை தயார் செய்திட வேண்டும். தீர்ப்பின் படி ஒரு மாத கால அவகாசத்திற்குள், ஒப்பந்த தொழிலாளர்களின் EPF, ESI கணக்குகளில் நிர்வாகம் நேரிடையாக முழுமையாக செலுத்தி விட்டதா என்று கண்காணித்து, அதன் அறிக்கையை மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்

5. சம்பளத்தை ஒருமாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்ற தீர்ப்புக்கேற்ப, ஏப்ரல் 2021 வரையிலான சம்பள பாக்கிகளை உடனே தீர்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு ஊழியர் / ஒப்பந்தகாரர் பட்டியலுடன் புகார் அளிக்க வேண்டும் 

6. நீதி மன்ற உத்தரவுக்கேற்ப போனஸ் பேச்சு வார்த்தையை ஒப்பந்தகாரர்களிடமும் நிர்வாகத்திடமும் உடனடியாக நடத்திட வேண்டும். முடிவு ஏற்படாத பட்சத்தில் மாநிலச் சங்கத்திற்கு விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

7. தற்போது பணியில் உள்ள எந்த ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலையும் விட்டு நீக்க கூடாது என்ற உத்தரவை, எங்கெல்லாம் பிரசனை உள்ளதோ அங்கு நிர்வாகத்துடன் பேசி தீர்வு கண வேண்டும்.

8. வழக்கை வெற்றிகரமாக முடித்திட்ட வழக்கறிஞருக்கு உரிய கட்டணத்தை நாம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளரிடமும் ஆயிரம் ரூபாய் வசூல் செய்து இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும். இந்த பணியை முடிப்பதற்கு BSNL ஊழியர் சங்கத்தின் உதவி தேவைப்பட்டால், அது வழங்கப்படும்.

9. வழக்கறிஞர் கட்டண வசூல் பணியை எளிதாக முடிப்பதற்கு வசதியாக கீழ்க்கண்ட விவரங்களை மாவட்ட சங்கங்கள் தயாரிக்க வேண்டும்

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வழக்கு தொடுத்தோர்கள் பட்டியலில்..              அ) யார் யார் சம்பள நிலுவை வாங்கியிருக்கின்றார்கள்?                                                ஆ) யார் யாருக்கு சம்பளம் மறுக்கப்பட்டுள்ளது?                                                                     இ) STR/STP பகுதி ஊழியர்கள் யார் யார் ?                                                                                     ஈ) யார் யார் கள ஆய்வுக்கு பெயர் சேர்க்கப்பட வில்லை? 

உ) யார் யார் பகுதி நேர ஊழியர்கள் ?                                                                                            ஊ) ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளியும் எவ்வளவு வாங்கியிருக்கின்றார்கள்?  

எ) ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளியும் வழக்கு கட்டணம் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள்?   போன்ற விவரங்கள் EXCELL SHEET-ல் இரண்டு தினங்களுக்குள் தயார் பண்ண வேண்டும்..

ஒவ்வொரு மாவட்டமும் வழங்கிய வழக்கு நிதியையும், கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்ட இலக்கு தொகையும், தனியே அனுப்பப்படும். வழக்கு நிதி வழங்கிய மாவட்ட சங்கங்களுக்கு விரைவில் உரிய ரசீது மாநில சங்கத்திலிருந்து அனுப்பப்படும். அதே போல் வழக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் மாவட்ட சங்கங்கள் ரசீது கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இணைந்த கூட்டத்தில் நிறைவுரை வழங்கிய மாநிலத் தலைவரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் S.செல்லப்பா அவர்கள் கீழ்க்கண்ட அம்சங்களை அழுத்தத்துடன் பதிவு செய்தார்:

1. சம்பளப் பிரச்னைக்காக தொழிற்சங்கப் போராட்டத்துடன் நீதி மன்றத்திலும் இரு சங்கங்கள் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி..

2. பிறபகுதி தொழிலாளர்களுக்கு முன்னோடியாக கிடைத்த வெற்றி..

3. இதையொட்டி ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை அமைப்பு நீதியாக வலுபடுத்த வேண்டும்..

4. சம்பளத்தை வாங்கிய ஊழியர்கள்அதற்குரிய வழக்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். 

5. வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட வழக்கறிஞருக்கு உரிய கட்டணத்தை கறாராக வசூலித்து குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும்.

6. இது சம்பந்தமாக எந்த மாவட்டத்திலாவது பிரச்னை என்றால் BSNL ஊழியர் சங்கம் முழு ஒத்துழைப்பை நல்கும். கடலூர், வேலூர் மாவட்டங்களில் இணைந்த செயற்குழு கூட்டத்தில் தான் உட்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தார். 

7. மன்றத்தீர்ப்பை அமுல்படுத்துவதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்..

நீதி மன்ற தீர்ப்பை கறாராக அமுல்படுத்துவோம்..

வழக்கு கட்டண வசூலை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடுவோம்..

பின்னர் தோழர் C.வினோத்குமார் அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் முடிவுற்றது.

வாழ்த்துக்களுடன்,

S.செல்லப்பா  மாநில தலைவர்

A.பாபு ராதாகிருஷ்ணன்  மாநில செயலாளர் BSNLEU

C.பழனிச்சாமி மாநில தலைவர்

C.வினோத்குமார் மாநில செயலாளர் TNTCWU

  *BSNL directed to pay wages to contract workers by 15th of every month* 

Within the said time, if the BSNL has not disbursed the wage or salary, that amount would carry an interest of 6 per cent per annum for any such belated payment, Justice R Suresh Kumar said in a recent order.

PTI Updated: May 06, 2021, 12:55 IST

BSNL directed to pay wages to contract workers by 15th of every monthChennai: The Madras High Court has directed the Bharat Sanchar Nigam Limited (BSNL) to pay wages to its contract workers, numbering about 4,500, by the 15th of every month. In future, the BSNL shall ensure that, whatever the workers or employees or contract employees are engaged through the contractors, the 30 day wage bill shall be claimed by the BSNL from such contractor on or before the 5th day of next calendar month, the court said.

On receipt of the bill, the workers shall be identified and the amount shall be quantified and accepted within five days thereafter and at any cost on or before the 15th of the next English calendar month, the previous month's 30 days bill for each of the employees shall be settled directly to the employees/workers.

Within the said time, if the BSNL has not disbursed the wage or salary, that amount would carry an interest of 6 per cent per annum for any such belated payment, Justice R Suresh Kumar said in a recent order.

The judge was disposing of a batch of writ petitions from the contract workers and their unions praying for a direction to the BSNL to pay the salary due to them from January 2019 and direct the contractors to contribute to the EPF and ESI and pay bonus for 2018-19.

Read also

BSNL staffers raise Rs 1.75L for contract workers going without pay for months

Regularise salary disbursement: BSNL employee group

As regards payment of bonus, the judge said that it is open to the workers or the workers union to agitate the same with BSNL and the contractors in the manner known to law and if such claim comes from the workers union, the same shall be resolved in accordance with law by the company by mutual negotiation after verifying the contract conditions.

If the issue becomes unresolvable, it can be referred to the Labour Commissioner for adjudication, the judge said.

Insofar as the statutory dues are concerned, the judge accepted the plea made by BSNL and permitted it to deduct the dues payable by these contractors to various authorities like EPF, ESI and GST and these dues can be paid directly to those statutory authorities.

 தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் விவரம்

கொரோனாவுக்கான சிகிச்சையை அரசு காப்பீட்டு திட்ட அட்டை உரிமையாளர்கள் காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது தனியார் மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்ளும் போது அந்த செலவினத்தை அரசு ஏற்கும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை பெற தகுதியானவர்கள்: 

வருட வருமானம் ரூபாய். 72000க்கும் குறைவாக ஈட்டுபவர்கள். 

குடும்ப அட்டை வைத்திருருந்தால் இந்த திட்டத்தில் பயனடைய முடியும். 

அரசு காப்பீடு திட்ட அட்டை பெறும் வழிமுறைகள்:

அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO ) வருமானச்சான்றில் கையெழுத்து பெறவேண்டும்.

பின்பு அந்த விண்ணப்பத்தை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் காப்பீடு மையத்தை (District kiosk) அணுகி ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டு காண்பித்து உறுதிப்படுத்திய பின் 22 இலக்க காப்பீடு எண்ணை தருவார்கள். 

அந்த எண்ணை வைத்து காப்பீடு திட்டத்தை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

மூன்று மாதம் கழித்து அருகில் உள்ள இ சேவை மையத்தில் சென்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 

இது குறித்த இன்னும் மேலதிக விபரங்களுக்கு https://www.cmchistn.com/ என்ற வளைதளத்தை அணுகலாம் 

இந்த திட்டத்தில் பயன்பெறத் தகுதியுடைய மக்கள் உடனே விரைந்து திட்டத்தில் இணைந்து இத்திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றிடுங்கள் 

இந்த திட்டத்தை அறிவித்த முதல்வருக்கு 

நன்றிகளும் வாழ்த்துகளும் 

ஏழைகள் பலரும் இதனால் பலனடைவார்கள் 

இதனால் அரசு மருத்துவமனைகள் மேலுள்ள அதீத அழுத்தம் லேசாகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது

 BSNL directed to pay wages to contract workers by 15th of every month

Click here

 BSNL ஊழியர் சங்கம்

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலச் சங்கங்கள்

தோழர்களே..

BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பள நிலுவை வழக்கு 28.04.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி விசாரணையின் தீர்ப்பு வெளியானது..

அதில் உள்ள முக்கிய அம்சங்கள்..

1) BSNL நிறுவனம் பல்வேறு உத்த்ரவுகளுக்கு இணங்க மொத்தம் 35.40 கோடி ரூபாயை லேபர் அதிகாரிகள் கணக்கில் செலுத்தியுள்ளது..

2) இதில் 4759 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 32,07, 51,841 ரூபாய் சம்பள நிலுவையாக இதுவரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது..

3) மேலும் இதுவரை வழங்கப்படாத 543 ஒப்பந்த தொழிலாளர்களுக்காக ரூபாய் 2,86,99,127 ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது..

4) அந்த தொகையை மேற்கண்ட 543 ஒப்பந்த தொழிலாளர்களின் வங்கி கணக்கை மறுபடியும் சரிபார்த்து விட்டு மத்திய லேபர் அதிகாரிகள் வழங்குவார்கள்..

5) மீதமுள்ள தொகையான ரூபாய் 45,58,776-யை இதுவரை சம்பள நிலுவை அனுமதிக்கப்படாதவர்களுக்கும், சம்பள நிலுவை குறைவாக பெற்றவர்களுக்கும் சரி பார்த்து பின்னர் வழங்கப்படும்..

6) இந்தப் பணி 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும்..

7) இந்தப்பணி முடிந்தாலும் முடியாவிட்டாலும் மீதமுள்ள தொகை BSNL நிர்வாகத்திற்கு 6 மாதங்கள் கழித்து திருப்பி அனுப்ப படும்..

8) ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சட்ட பூர்வ சலுகையான EPF, ESI தொகையை BSNL நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களின் EPF, ESI கணக்கிற்கு 30 தினங்களுக்குள் நேரிடையாக செலுத்தப்படும்..

9) இனி வருங்காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். காலதாமதம் செய்யப்படும் பட்சத்தில் 6% அபராத வட்டியுடன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு BSNL நிர்வாகம் சம்பளம் வழங்க வேண்டும்..

10) போனஸ் தொகை சம்பந்தமாக சங்கம், BSNL நிர்வாகம் மற்றும் ஒப்பந்தகாரர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யலாம்.. பேச்சு வார்த்தை மூலம் தீர்வடையாவிட்டால் லேபர் அதிகாரிகள் மூலம் தீர்வு காணலாம்..

11) தற்போதுள்ள கொரோனோ தொற்று நோய் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு பல வருடங்களாக வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை BSNL நிர்வாகம் வேலை நீக்கம் செய்யக்கூடாது..

இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னோடியாக நமது சங்கம் வழக்கு தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் சம்பள நிலுவையை ஆகஸ்ட்/ செப்டம்பர் 2020 வரை பெற்று விட்டோம்..

சம்பள நிலுவை விடுபட்ட 543 தொழிலாளர்களுக்கும் உத்தரவு வாங்கிவிட்டோம்..

குறைவான சம்பள தொகை பெற்றவர்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்..

இனி மாத மாதம் சம்பளம், நிலுவையில் உள்ள EPF, ESI தற்போதுள்ள ஒப்பந்த தொழிலாளிக்கு பணி பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உறுதி செய்துள்ளோம்..

தீர்ப்பை கறாராக அமுல் படுத்த வேண்டிய கடைமை நம் அனைவரின் முன்னே உள்ளது..

வாழ்த்துக்களுடன்

S.செல்லப்பா மாநிலத் தலைவர் 

A. பாபுராதாகிருஷ்ணன் மாநிலச் செயலர் BSNLEU

C. பழனிச்சாமி  மாநிலத் தலைவர்

C. வினோத்குமார் மாநிலச் செய்லர் TNTCWU

 தோழர்களே விடுபட்ட 543 ஒப்பந்த தொழிலாளர்களின் வங்கி கணக்கை மறுபடியும் மாவட்ட நிர்வாகங்கள் ஆய்வு செய்கின்றன. 543 ஒப்பந்த தொழிலாளர்களின் பட்டியல் ஏற்கனவே அனுப்ப பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகங்களுடனும் பாதிக்கபட்ட ஒப்பந்த தொழிலாள்ர்களுடனும் தொட்ர்பு கொண்டு எந்த தவறும் இல்லாத வங்கி விவரங்களை உடனே மாநில அலுவலக்த்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் !



 


 

 மார்க்ஸ் எனும் மாமனிதர்! 

இன்று - மே 5: மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியைத் தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்.

உலகின் தலைசிறந்த காதல், நட்பு, சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால், கார்ல் மார்க்ஸுக்குதான் அப்பெருமை.

போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்தபொழுது எளியவர்களும், பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதரின் வாழ்க்கை...

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலம்

நாள் :03.05.2021

தோழர்களே..

வழக்கு நிதி பற்றி விவாதிக்க சங்கத்தின் மாவட்ட செயலர்கள் கூட்டம்   02.05.2021 அன்று நடைபெற்றது..

கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது..

1) இதுவரை வழக்கு நிதியை வசூல் செய்து மாவட்ட சங்கங்களிடம்  உள்ள தொகையை உடனே மாநில சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும்..

2) இம்மாதம் 5-ஆம் தேதிக்குள் வழக்கு நிதி வசூலை இறுதிப்படுத்த வேண்டும்..

3) இதுவரை சம்பள நிலுவை கிடைக்கப்பெறாத 543 ஒப்பந்த தொழிலாளர்கள்,  குறைவான சம்பளத்தொகை, விடுபட்ட காலத்திற்கான சம்பளத்தொகை, சட்டபூர்வ சலுகைகளான EPF, ESI, போனஸ் ஆகியவற்றை தீர்வு காண நமது சங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்..

கூட்ட முடிவுகளை கறாராக அமுல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்..

தோழமையுடன்,

மாநிலச் சங்கம்..


  மேதினம்

மேதின வாழ்த்துக்கள் வெறும் சம்பிரதாயமல்ல !

உழைப்பு சுரண்டலை எதிர்த்து ரத்திம் சிந்திய தியாகிகளுக்கு

தூக்கு மேடையேறிய தியாகப் போராளிகளுக்கு 

வீர அஞ்சலி செலுத்தும் நாள் மட்டும் அல்ல !

உழைப்பே அனைத்து செல்வத்திற்கும் மூல காரணம்

உழைப்பாளிகள் தான் அனைத்தையும் உருவாக்குகின்றார்கள்

இதற்கு முரணாக முதலாளிகள் தான் செல்வத்தை உருவாக்குகின்றார்கள்

என்ற முதலாளித்துவ கோட்பாட்டை முறியடிக்க சபதம் ஏற்கும் நாள் !

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே !

இதற்கு மாறாக சாதி, இனம், மதம் , மொழியால்

தொழிலாளிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்தும் 

சதிகாரர்களை விரட்டியடிக்க சபதம் ஏற்கும் நாள் !

தினம் தினம் போராடி போராடி பெற்ற அனைத்து சலுகைகளையும் 

ஒவ்வொன்றாக பறிக்கின்ற கார்போரெட் அடிமை ஆட்சியாளர்களை

ஆட்சிக் கட்டிலிருந்து வெளியேற்ற சபதம் ஏற்கும் நாள் ! பெற்ற உரிமைகள் பாதுகாக்க வேண்டும் ! புதிய உரிமைகள் பெற வேண்டும் !

எல்லாவற்றிற்கும் மேலாக இன்றைய உலகை ஆள வேண்டும்

என்று வீர சபதம் ஏற்கும் நாள் !  

மேதினம் வாழ்க ! மேதின சபதங்கள் வேற்றி பெற சூளுரைப்போம் !