<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 12 May 2021

BSNL ஊழியர் சங்கம் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலம் 

தேதி : 10.05.2021 


அன்புத் தோழர்களே. 

                    இரண்டு சங்கங்களின் இணைந்த மாநில செயற்குழு கூட்டம் 07.05.2021 மற்றும் 08.05.2021 ஆகிய இரண்டு தினங்களில் மண்டலம் வாரியாக தனித்தனியாக மூன்று கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. 

                28.04.2021 தேதியில் வெளியான நீதிமன்ற தீர்ப்பும் அதை ஒட்டி நமது கடமைகளும் என்பவை ஆய்படு பொருட்களாக எடுத்துக் கொள்ளப்பட்டன. BSNLEU மாநிலச் செயலர் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டங்களில் BSNLEU மாநிலத் தலைவர் மற்றும் அகில இந்திய உதவிப்பொதுச் செயலர் தோழர் S. செல்லப்பா TNTCWU தலைவர் தோழர் C. பழனிச்சாமி, TNTCWU மாநிலச் செயலர் தோழர் C. வினோத்குமார் ஆகியோர் உட்பட பெரும்பாலான மாவட்ட செயலர்களும் மாநிலச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

               சமீபத்தில் மரணமடைந்த சென்னை மாநில BSNLEU முன்னாள் மாநிலச் செயலர் தோழர் கன்னியப்பன், வேலூர் AIBDPA மாவட்ட செயலர் தோழர் ஜோதி சுதந்திர நாதன், தர்மபுரி முன்னாள் TNTCWU மாவட்ட செயலர் தோழர் கஜபதி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட்து. 

                  28.04.2021 சென்னை உயர் நீதி மன்றத்தின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தோழர் C. வினோத்குமாரும் தோழர் C. பழனிச்சாமியும் தோழர் A. பாபு ராதாகிருஷ்ணனும் விளக்கி பேசினார்கள். இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கம் இது வரை பெற்றிடாத வெற்றி என்று மனமார பாராட்டினார்கள். சம்பள வழங்கிய மத்திய லேபர் அதிகாரியே நீதி மன்றத்தில் சமர்ப்பித்த தன்னுடைய அறிக்கையில் இந்தியாவில் எந்த ஒரு லேபர் அதிகாரிக்கும் கிடைக்காத பொறுப்பு, தனக்கு வழங்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 5,000 ஒப்பந்த தொழிலாளர்களின் இல்லங்களில் தீபத்தை ஏற்றி வைத்ததாகவும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். இது நமது சங்கத்தின் சாதனையை எடுத்துரைப்பதாகவே உள்ளது.

BSNL நிறுவனம், நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளுக்கு இணங்க மொத்தம் 35.40 கோடி ரூபாயை, லேபர் அதிகாரிகள் கணக்கில் செலுத்தியுள்ளது. இதில் 4,759 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 32,07,51,841 ரூபாய் சம்பள நிலுவையாக இதுவரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வழங்கப்படாத 543 ஒப்பந்த தொழிலாளர்களுக்காக ரூபாய் 2,86,99,127 ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது மீதமுள்ள தொகையான ரூபாய் 45,58,776-யை இதுவரை சம்பள நிலுவை அனுமதிக்கப் படாதவர்களுக்கும், சம்பள நிலுவை குறைவாக பெற்றவர்களுக்கும் சரி பார்த்து பின்னர் வழங்கப்படும் என்ற தகவல்களை தெரிவித்தார்கள். வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட வழக்கறிஞர் திரு N.G.R பிரசாத் மற்றும் அவரது குழுவினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்

 தீர்ப்பையொட்டி கீழ்க்கண்ட கடமைகளை செய்திட வேண்டும் என்று நீண்ட விவாதத்திற்குப் பின்னர் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

1. விடுபட்ட 543 ஒப்பந்த தொழிலாளர்களின் விவரங்களை மறுபடியும் சேகரித்து மாவட்ட நிர்வாகங்கள் / மாநில நிர்வாகம் மூலமாக மத்திய லேபர் அதிகாரிக்கு உடனடியாக அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அனுப்பிய வங்கி விவரங்களை ஆய்வு செய்து அதில் ஏற்பட்ட தவறு மறுபடியும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2. தற்போது வழக்கு பட்டியலில் இருந்த போதும் தொகை அனுமதிக்க படாதவர்களின் பட்டியல், குறைவாக சம்பளம் பெற்றவர்களின் பட்டியலை ஆதாரத்துடன் தயார் செய்து மாவட்ட சங்கங்கள் மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

3. அதே போல் கள ஆய்வு செய்யப்படாதவர்கள் பட்டியல் / மறைந்த ஒப்பந்த தொழிலாளர்களின் வாரிசு மற்றும் அவர்களின் சம்பள பாக்கி பட்டியல் போன்றவறறைகளையும் மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்

4. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களின் EPF, ESI கணக்கு விவர பட்டியலை தயார் செய்திட வேண்டும். தீர்ப்பின் படி ஒரு மாத கால அவகாசத்திற்குள், ஒப்பந்த தொழிலாளர்களின் EPF, ESI கணக்குகளில் நிர்வாகம் நேரிடையாக முழுமையாக செலுத்தி விட்டதா என்று கண்காணித்து, அதன் அறிக்கையை மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்

5. சம்பளத்தை ஒருமாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்ற தீர்ப்புக்கேற்ப, ஏப்ரல் 2021 வரையிலான சம்பள பாக்கிகளை உடனே தீர்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு ஊழியர் / ஒப்பந்தகாரர் பட்டியலுடன் புகார் அளிக்க வேண்டும் 

6. நீதி மன்ற உத்தரவுக்கேற்ப போனஸ் பேச்சு வார்த்தையை ஒப்பந்தகாரர்களிடமும் நிர்வாகத்திடமும் உடனடியாக நடத்திட வேண்டும். முடிவு ஏற்படாத பட்சத்தில் மாநிலச் சங்கத்திற்கு விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

7. தற்போது பணியில் உள்ள எந்த ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலையும் விட்டு நீக்க கூடாது என்ற உத்தரவை, எங்கெல்லாம் பிரசனை உள்ளதோ அங்கு நிர்வாகத்துடன் பேசி தீர்வு கண வேண்டும்.

8. வழக்கை வெற்றிகரமாக முடித்திட்ட வழக்கறிஞருக்கு உரிய கட்டணத்தை நாம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளரிடமும் ஆயிரம் ரூபாய் வசூல் செய்து இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும். இந்த பணியை முடிப்பதற்கு BSNL ஊழியர் சங்கத்தின் உதவி தேவைப்பட்டால், அது வழங்கப்படும்.

9. வழக்கறிஞர் கட்டண வசூல் பணியை எளிதாக முடிப்பதற்கு வசதியாக கீழ்க்கண்ட விவரங்களை மாவட்ட சங்கங்கள் தயாரிக்க வேண்டும்

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வழக்கு தொடுத்தோர்கள் பட்டியலில்..              அ) யார் யார் சம்பள நிலுவை வாங்கியிருக்கின்றார்கள்?                                                ஆ) யார் யாருக்கு சம்பளம் மறுக்கப்பட்டுள்ளது?                                                                     இ) STR/STP பகுதி ஊழியர்கள் யார் யார் ?                                                                                     ஈ) யார் யார் கள ஆய்வுக்கு பெயர் சேர்க்கப்பட வில்லை? 

உ) யார் யார் பகுதி நேர ஊழியர்கள் ?                                                                                            ஊ) ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளியும் எவ்வளவு வாங்கியிருக்கின்றார்கள்?  

எ) ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளியும் வழக்கு கட்டணம் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள்?   போன்ற விவரங்கள் EXCELL SHEET-ல் இரண்டு தினங்களுக்குள் தயார் பண்ண வேண்டும்..

ஒவ்வொரு மாவட்டமும் வழங்கிய வழக்கு நிதியையும், கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்ட இலக்கு தொகையும், தனியே அனுப்பப்படும். வழக்கு நிதி வழங்கிய மாவட்ட சங்கங்களுக்கு விரைவில் உரிய ரசீது மாநில சங்கத்திலிருந்து அனுப்பப்படும். அதே போல் வழக்கு நிதி வழங்கிய அனைவருக்கும் மாவட்ட சங்கங்கள் ரசீது கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இணைந்த கூட்டத்தில் நிறைவுரை வழங்கிய மாநிலத் தலைவரும் அகில இந்திய உதவிப் பொதுச் செயலருமான தோழர் S.செல்லப்பா அவர்கள் கீழ்க்கண்ட அம்சங்களை அழுத்தத்துடன் பதிவு செய்தார்:

1. சம்பளப் பிரச்னைக்காக தொழிற்சங்கப் போராட்டத்துடன் நீதி மன்றத்திலும் இரு சங்கங்கள் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி..

2. பிறபகுதி தொழிலாளர்களுக்கு முன்னோடியாக கிடைத்த வெற்றி..

3. இதையொட்டி ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை அமைப்பு நீதியாக வலுபடுத்த வேண்டும்..

4. சம்பளத்தை வாங்கிய ஊழியர்கள்அதற்குரிய வழக்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். 

5. வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட வழக்கறிஞருக்கு உரிய கட்டணத்தை கறாராக வசூலித்து குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும்.

6. இது சம்பந்தமாக எந்த மாவட்டத்திலாவது பிரச்னை என்றால் BSNL ஊழியர் சங்கம் முழு ஒத்துழைப்பை நல்கும். கடலூர், வேலூர் மாவட்டங்களில் இணைந்த செயற்குழு கூட்டத்தில் தான் உட்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொள்வதாக தெரிவித்தார். 

7. மன்றத்தீர்ப்பை அமுல்படுத்துவதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்..

நீதி மன்ற தீர்ப்பை கறாராக அமுல்படுத்துவோம்..

வழக்கு கட்டண வசூலை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்திடுவோம்..

பின்னர் தோழர் C.வினோத்குமார் அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் முடிவுற்றது.

வாழ்த்துக்களுடன்,

S.செல்லப்பா  மாநில தலைவர்

A.பாபு ராதாகிருஷ்ணன்  மாநில செயலாளர் BSNLEU

C.பழனிச்சாமி மாநில தலைவர்

C.வினோத்குமார் மாநில செயலாளர் TNTCWU

No comments:

Post a Comment