<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 12 May 2021

 BSNL ஊழியர் சங்கம்

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலச் சங்கங்கள்

தோழர்களே..

BSNL ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பள நிலுவை வழக்கு 28.04.2021 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி விசாரணையின் தீர்ப்பு வெளியானது..

அதில் உள்ள முக்கிய அம்சங்கள்..

1) BSNL நிறுவனம் பல்வேறு உத்த்ரவுகளுக்கு இணங்க மொத்தம் 35.40 கோடி ரூபாயை லேபர் அதிகாரிகள் கணக்கில் செலுத்தியுள்ளது..

2) இதில் 4759 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 32,07, 51,841 ரூபாய் சம்பள நிலுவையாக இதுவரை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது..

3) மேலும் இதுவரை வழங்கப்படாத 543 ஒப்பந்த தொழிலாளர்களுக்காக ரூபாய் 2,86,99,127 ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது..

4) அந்த தொகையை மேற்கண்ட 543 ஒப்பந்த தொழிலாளர்களின் வங்கி கணக்கை மறுபடியும் சரிபார்த்து விட்டு மத்திய லேபர் அதிகாரிகள் வழங்குவார்கள்..

5) மீதமுள்ள தொகையான ரூபாய் 45,58,776-யை இதுவரை சம்பள நிலுவை அனுமதிக்கப்படாதவர்களுக்கும், சம்பள நிலுவை குறைவாக பெற்றவர்களுக்கும் சரி பார்த்து பின்னர் வழங்கப்படும்..

6) இந்தப் பணி 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும்..

7) இந்தப்பணி முடிந்தாலும் முடியாவிட்டாலும் மீதமுள்ள தொகை BSNL நிர்வாகத்திற்கு 6 மாதங்கள் கழித்து திருப்பி அனுப்ப படும்..

8) ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சட்ட பூர்வ சலுகையான EPF, ESI தொகையை BSNL நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களின் EPF, ESI கணக்கிற்கு 30 தினங்களுக்குள் நேரிடையாக செலுத்தப்படும்..

9) இனி வருங்காலத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். காலதாமதம் செய்யப்படும் பட்சத்தில் 6% அபராத வட்டியுடன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு BSNL நிர்வாகம் சம்பளம் வழங்க வேண்டும்..

10) போனஸ் தொகை சம்பந்தமாக சங்கம், BSNL நிர்வாகம் மற்றும் ஒப்பந்தகாரர்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யலாம்.. பேச்சு வார்த்தை மூலம் தீர்வடையாவிட்டால் லேபர் அதிகாரிகள் மூலம் தீர்வு காணலாம்..

11) தற்போதுள்ள கொரோனோ தொற்று நோய் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு பல வருடங்களாக வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களை BSNL நிர்வாகம் வேலை நீக்கம் செய்யக்கூடாது..

இந்திய நாட்டு தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னோடியாக நமது சங்கம் வழக்கு தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் சம்பள நிலுவையை ஆகஸ்ட்/ செப்டம்பர் 2020 வரை பெற்று விட்டோம்..

சம்பள நிலுவை விடுபட்ட 543 தொழிலாளர்களுக்கும் உத்தரவு வாங்கிவிட்டோம்..

குறைவான சம்பள தொகை பெற்றவர்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்..

இனி மாத மாதம் சம்பளம், நிலுவையில் உள்ள EPF, ESI தற்போதுள்ள ஒப்பந்த தொழிலாளிக்கு பணி பாதுகாப்பு ஆகியவற்றிற்கும் உறுதி செய்துள்ளோம்..

தீர்ப்பை கறாராக அமுல் படுத்த வேண்டிய கடைமை நம் அனைவரின் முன்னே உள்ளது..

வாழ்த்துக்களுடன்

S.செல்லப்பா மாநிலத் தலைவர் 

A. பாபுராதாகிருஷ்ணன் மாநிலச் செயலர் BSNLEU

C. பழனிச்சாமி  மாநிலத் தலைவர்

C. வினோத்குமார் மாநிலச் செய்லர் TNTCWU

No comments:

Post a Comment