<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 28 April 2021

 தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலம் REGD : VDR 278 

மாவட்ட செயலர்கள் / மாநில சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு..

கீழ்க்கண்ட முக்கிய பணிகளில் உரிய உடனடி கவனம் செலுத்துமாறு மாவட்ட சங்க / மாநிலச் சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொள்கின்றோம்..

1) இதுவரை சம்பள நிலுவை கிடைக்கப் பெறாதவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமான மகஜர் திங்கட்கிழமை (26.04.2021) அளிக்க வேண்டும். மாதிரி மகஜர் ஏற்கனவே குழுமத்தில் பதிவிடப்பட்டுள்ளது..

2) அதே போல் குறைவான சம்பள நிலுவை கிடைக்க பெற்றவர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமான மகஜர் திங்கட்கிழமை (26.04.2021) அளிக்க வேண்டும். மாதிரி மகஜர் ஏற்கனவே குழுமத்தில் பதிவிடப்பட்டுள்ளது..

3.) இதுவரை கள ஆய்வு(Verification) செய்யப்படவில்லை என்றால் அந்த தோழர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு மகஜர் அளிக்க வேண்டும்..

4) இவைகள் சம்பந்தமாக மாவட்ட சங்கங்கள் BSNLEU சங்கத்துடன் இணைந்து நிர்வாகத்திற்கு திங்கட்கிழமை (26.04. 2021) புகார் கடிதம் கொடுக்க வேண்டும். மாதிரி கடிதம் ஏற்கனவே குழுமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நகலை மாநில சங்கத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்..

5) 28-04-2021 அன்று இறுதி விசாரணை நடைபெற உள்ளது. அன்றே தீர்ப்பும் வழங்கப்பட்டு நமது வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. எனவே நாம் 20.04.2021 அன்று நடைபெற்ற மாநிலச் செயற்குழு முடிவுக்கேற்ப ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளிக்கும் 28.02. 2021 வரை வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை, மொத்தம் வாங்கிய தொகை, விடுபட்ட தொகை ஆகிய விவரங்களை மாநில சங்கத்திற்கு அனுப்பவும்..

6) வழக்கறிஞர் கட்டணம் வசூலை விரைந்து முடிக்க வேண்டும். நெல்லை (Rs.40 000 ), குடந்தை (Rs.40000) விருதுநகர் (25000 இரண்டாவது தவணை) மாவட்டங்கள் வழக்கு கட்டணம் அனுப்பியுள்ளன. பிற மாவட்டங்களும் வசூலித்த தொகையை உடனடியாக அனுப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..

7) இந்தப் பணிகளோடு உறுப்பினர் பதிவையும் முடித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்..

தோழமையுடன் மாநிலச் சங்கம்..

No comments:

Post a Comment