தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்
Regd No: VDR 278
அன்புத் தோழர்களே !
வணக்கம்.
23 03 2021 அன்று நடைபெற்ற அவசர செயற்குழு முடிவுகள் :
1. தோழர் C.வினோத்குமார் விடுப்பில் இருப்பதால் TNTCWU உதவிச் செயலர் தோழர் C. பாஸ்கர் அவர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை பொறுப்புச் செயலராக செயல்படுவார்.
2. மிகப்பெரிய சாதனை செய்து , முந்தைய நீதிபதி மூலம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இரண்டு வார காலத்திற்குள் சம்பள நிலுவை வழங்க வேண்டும் என்று நீதி மன்ற உத்தரவை பெற்றுக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் திரு N G R பிரசாத் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
3. TNTCWU சங்கத்திற்கு கீழ்க்கண்ட தோழர்கள் கொண்ட ஒரு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
தோழர்கள் C. பழனிச்சாமி, C. வினோத்குமார், M.முனிராஜ், M.பிரதீபா,
M. வேலுசாமி, M. சையத் ஈத்ரீஸ், T.செந்தில்குமார் , C. பாஸ்கர்
4. சம்பள நிலுவை வழங்கப்பட்டவுடன் வழக்கறிஞர் கட்டணத்தொகை ரூபாய் 1 000 ம், சங்க உறுப்பினர் கட்டணமும் அனைத்து தோழர்களிடம் கறாராக வசூல் செய்யப்படவேண்டும்.
5. சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. “ ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளிக்கும் எவ்வளவு சம்பள பாக்கி தொகை என்பதை அவர்கள் கோரியதின் அடிப்படையில், BSNL நிர்வாகத்திடமும் ஒப்பந்தகாரர்களிடமும் உள்ள பட்டியலை சரிபார்ப்பு செய்த பின்னர் , அவர்களுக்கான உரிய தொகையை இரண்டு வார காலத்திற்குள் மத்திய லேபர் அதிகாரிகள் வழங்கவேண்டும். அதன் பின்னர் எந்த ஒரு தொழிலாளியின் கோரிக்கையையும் நீதி மன்றம் பரிசீலனை செய்யாது. “ எனவே ஒப்பந்த தொழிலாளர் சம்பள பாக்கி தொகையையும் பிப்ரவரி 2021 வரை முழுமையாக கணக்கீடு செய்யப்பட வேண்டும். இன்று ( 23 03 2021 ) மத்திய லேபர் அதிகாரிகளை தோழர்கள் BSNLEU மாநிலச் செயலர் A. பாபு ராதாகிருஷ்ணனும், BSNLEU மாநிலப் பொருளர் K.சீனிவாசனும், சந்தித்து சம்பளம் வழங்குவது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். பேச்சு வார்த்தை முடிவுக்கேற்ப நாம் செய்ய வேண்டிய பணி குறித்து இன்று ( 24 03 21 ) இரவு மையக்கூட்டம் கூடி முடிவு செய்யும்
6. நீதி மன்ற உத்தரவை சிறு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு அனைத்து ஒப்பந்த தொழிலாள்ர்கள், நிரந்தர ஊழியர்களிடம் வினியோகம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்ட்து.
செயற்குழு கூட்டத்தில் தோழர்கள் BSNLEU மாநிலச் செயலர் A. பாபு ராதாகிருஷ்ணன், BSNLEU மாநிலத்தலைவர் தோழர் S.செல்லப்பா , BSNLEU மாநிலப் பொருளர் சீனிவாசன், மற்றும் தோழர்கள் M. சூசை மரிய அந்தோணி நெல்லை BSNLEU மாவட்ட செயலர் , P. ராஜு நாகர்கோவில் BSNLEU மாவட்ட செயலர் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
C. பாஸ்கர்
TNTCWU பொறுப்பு செயலர்
Mob: 98655 72524
24 03 2021
No comments:
Post a Comment