<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 28 April 2021

 BSNL ஊழியர் சங்கம் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலச் சங்கங்கள்

நாள் : 22.04.2021

தோழர்களே..

நம்முடைய கடும் முயற்சியால் மூன்றாவது கட்ட சம்பள பட்டுவாடா 20 ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் Deputy Chief Labour Commissioner அலுவலகம் மூலம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. 

20.04.2021 நடைபெற்ற மாநிலச் செயற்குழு முடிவு

20.04.2021 அன்று நமது சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் தோழர் C.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களும்  

பெற்றபின் இரண்டு சங்கங்களின் சார்பில் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி இனிப்பு வழங்குவதென தீர்மாக்கப்பட்டது. 26-ஆம் தேதி அதை நடத்துமாறு அனைத்து மாவட்ட செயலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 

அதே போல் வழக்குநிதி கட்டணத்தை 25.04.2021 இறுதிப்படுத்த வேண்டும் சங்க உறுப்பினர் பதிவை 05.05.2021-க்குள் முடிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாபெரும் வெற்றிக்கு மூல காரணமாக இருந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் தோழர் P.சம்பத் அவர்களையும் நமது வழக்கறிஞர் திரு N.G.R பிரசாத் அவர்களையும் நேரில் சென்று கௌவிரவிப்பது என்றும் முடிவு செய்யப்ட்டது.

செயற்குழு கூட்டத்தில் தோழர்கள் S.செல்லப்பா அவர்களும் தோழர் A.பாபு ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்..

21.04.2021 உயர்நீதி மன்ற விசாரணை..

இதனிடையே குறிப்பிட்டபடி 21.04.2021 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது..

தமிழ்நாடு முழுவதும் 4668 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுமார் 20.47 கோடி ரூபாய் வங்கி மூலம் 20.04.2021 அன்று வழங்கப்பட்டு வருவதாகவும் சம்பளம் முழுமையாக சென்றடைந்து விட்டதா என்ற முழுமையாக விவரம் கிடைக்க 23-ஆம் தேதிவரை ஆகும் என்று DY CLC சார்பாக நீதிமன்றத்தில் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி அவர்கள் அடுத்த நடவடிக்கை அறிக்கையை Dy CLC அவர்கள் சமர்ப்பிக்க 27.04.2021 வரை அவகாசம் கொடுத்து உள்ளார். அதன் பின்னர் ஒப்பந்த காரர்களுக்கு அளிக்க வேண்டிய தொகை, சட்டபூர்வமாக செலுத்த வேண்டிய தொகை போன்ற அனைத்து விசயங்கள் சம்பந்தமாக இறுதி உத்தரவு வெளியிடப்படும் என்று அறிவித்தார். அந்த உத்தரவோடு இந்த வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இறுதி விசாரணை 28.04. 2021 அன்று நடைபெறும் என்று உத்த்ரவிட்டுள்ளார். 

அடுத்த விசாரணை இறுதியான விசாரணை என்பதால் நாம் தொடுத்த வழக்கின்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுட்டு விட்டதா என்று ஒவ்வொரு மாவட்ட சங்கமும் தெளிவான விவரமான அறிக்கையை 25.04.202- க்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட சங்கமும் 28.02. 2021 வரை எவ்வளவு சம்பளம் பாக்கி என்பதை அனுப்பியிருந்தார்கள். அந்த அறிக்கையில் தற்போது வழங்கப்பட்டுள்ள சம்பள விவரத்தையும் இணைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். முக்கியமாக குறைவான சம்பளத்தையும் விடுபட்ட சம்பளத்தையும் விடுபட்ட தோழர்களின் பெயர்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். காலதாமதம் ஏற்படக்கூடாது.  

அதே போல் ஒவ்வொரு ஒப்பந்த தொழிலாளியின் EPF, ESI பிரச்னை விவரங்களையும் ஆதாரங்களுடன் சேகரித்து வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.   நமது உரிமைகள் அனைத்தும் முழுமையாக அடையும் வரை நாம் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்..

வாழ்த்துக்களுடன்

S. செல்லப்பா   

மாநிலத் தலைவர்      

A. பாபுராதாகிருஷ்ணன் மாநிலச் செயலர்

BSNLEU

C. பழனிச்சாமி  

மாநிலத் தலைவர்  

C. வினோத்குமார் 

மாநிலச் செயலர்

TNTCWU

No comments:

Post a Comment