<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Thursday 21 January 2016

"இந்திய தளபதி...!"

 



 ( சுபாஷ் சந்திர போஸ் ) 
           23.01.2015
119 வது பிறந்த தினம்
வங்கம் தந்த சிங்கமே...!
வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே...!
இந்திய இளைஞர்களின் எழுச்சியே...!
இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...!!

அடிமைத் தளை தகர்த்தெறிய
அரும்பாடு பட்டு ஆயுளில் பாதியை
சிறைச்சாலை செல்லுகளில்
செலவழித்த செம்மலே...!

கல்கத்தாவை கட்டியமைத்த கர்ம வீரனே..!  
தேசத்தின் விழிகளில் கண்ணீர்த் துடைக்க
தேகத்தை தியாகித்து செந்நீர் சிந்தியவனே..!
மேகத்தில் மிதந்து தாகங்கள் தணிந்தவனே.


கூட்டுப் புழுக்களின் கூட்டத்தில் சிறகை பரிசளித்தவனே..!
நாட்டு விடுதலைக்கு எதிரியின் சிறகொடித்தவனே..!
வசதியாய் பிறந்தும் வறுமையை சந்தித்து
வாழ்க்கை முழுதும் தேசம் சிந்தித்தவனே..!


 

செம்மறிகள் முன் சிங்கமென அந்நியர்
அதிர பெரும்படை நடத்திய பேராண்மையே..!
நிலமும் கடலும் தடை இல்லையென
நீண்டு கிடக்கும் உலகில் பறந்தவனே...!!

இன்றும் எங்கள் இரத்தத்தில் இளஞ்சூட்டை
தணியாமல் தகிக்க வைக்கும் புரட்சியே..!
வார்த்தைகளில் இல்லாமல் செயல்களில் வாழ்க்கை
செதுக்கிய செம்மலே...! பாரதத்தின் தவப்புதல்வ...!!

புகழுக்கு மயங்காத புரட்சியின் புத்துயிரே..!
புழுக்களின் கூடாரத்தில் குலவியாய் கொட்டியவனே..!
வழுக்களின் சூழ்ச்சியை வஞ்சகத்தை திட்டியவனே..!
கைக் கொடுக்காதார் கைகளில் தேசம்

காணப் பொறுக்கா நீ கண்டங்கள்
கடந்தாய்.. இந்திய இளையத் துண்டங்கள்
கரம் கோர்க்க வான் தரை 
கடல் யாவிலும் படை நடத்திய

எங்கள் பாரதமே...!

உண்மைகள் மறைக்கப் பட்ட
எங்கள் பாரதத்தின் மர்மமே...!!

இந்தியாவின் இரத்த சரித்திரமே...!!!

 

நின் புகழில் எங்கள் தேசத்தில் புது இரத்தம் பாயட்டும்...! வீரம்
விளையட்டும்..! வங்கம் தந்த தங்கம்...!
வாழிய நின் வான் புகழ்...!!


இந்திய இளைய சமூகத்தின் "படைத்தளபதி", புரட்சிப்படை நடத்திய "அஞ்சா சிங்கம்", தேசத்தின் தவப் புதல்வன் "சுபாஷ் சந்திர போஸ்" அவர்களின் 119 வது பிறந்த                 நாளுக்கு         
T N T C W U - திருச்சி மாவட்ட சங்கத்தின் சமர்ப்பணம்.
 


சுபாஷ் சந்திர போஸின் குறிப்பு :
பிறப்பு : 23..01.1897. 
பெற்றோர் : தந்தை- ஜானகி நாத் போஸ், தாய் - பிரபாவதி தேவி.
படிப்பு : ஐ.சி.எஸ். ( கேம்ப்பிரிட்ஜ் பல்கலை. இலண்டன் )
*******************************************************