<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Tuesday 5 January 2016

                           எங்கெங்கு நோக்கினும் ஒப்பந்த தொழிலாளர்கள்

                                                 ஒப்பந்த தொழிலாளர்கள் திருச்சி மண்டல சிறப்பு மாநாடு CITU  வின் முன் முயற்சியால் 03-01-2016 அன்று திருச்சியில் நடந்தது.
     மாநாட்டில்  BSNL, BHEL, Railway, Airport, Indian Ordinance Factory, EB, TWAD Civil Supplies  பகுதியைச் சார்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு சிஐடியு திருச்சிமாநகர் மாவட்ட தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநில துணைப்பொதுச்செயலாளர் வி. குமார், மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
                                                  மாநாட்டில் அரசு பொதுத்துறை, தனியார் நிறுவனங்களில்  ஒப்பந்ததாரர் மாறினாலும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும்.

                                                நிரந்தரத் தன்மை வாய்ந்த தொழில்களில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.
                                               சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும்.
                                               தொடர்ச்சியாக பல ஆண்டு காலம் பணியாற்றும் ஒப்பந்தஊழியர்களை நிரந்தரப் படுத்த வேண்டும்.
                                                பி.எப், இஎஸ்ஐ ஒப்பந்தத்தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்வது கட்டாயமாக்கப்பட  வேண்டும்.
                                              குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.15ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை முன்மொழிந்து சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், புதுக்கோட்டை சிஐடியு மாவட்ட செயலாளர் செல்வராஜ், நாகை மாவட்ட செயலாளர் சீனிமணி, திருவாரூர் மாவட்ட செயலாளர் பழனிவேல் ஆகியோர் பேசினர். முன்னதாக சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் சிவராஜ் வரவேற்றார். முடிவில் பெல் கந்தசாமி நன்றி கூறினார்.