<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Monday 25 January 2016

குடியரசை போற்றுவோம்!

குடியரசு தினம் republic day


 
மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!
விடுதலை இந்தியாவில்
விடியலைத் தந்தது
குடியரசு!

பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்!
வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்! – அனைவரின்
உள்ளத்தைச் சமப்படுத்தியது
குடியரசு!!

சுதந்திரம் அடைந்தாலும்
தந்திரமாய் நுழைந்தது ஜாதி! – இந்தியாவில்
சுதந்திரமாய் சுற்றித்திரிகிறது ஜாதி!! – மானுடத்தை
மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்! – இந்தியனை
எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!
இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
கொடிதனை ஏற்றுவோம்!!

மன்னர்கள் காலத்தில் முடியரசு!
என்றுமே போற்றத்தக்கது நம்குடியரசு!!!
குடியரசை போற்றுவோம்!
குடியரசைப் போற்றுவோம்! – TNTCWU TRICHY