<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Wednesday 21 April 2021

 BSNL ஊழியர் சங்கம்

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலச் சங்கங்கள்

தேதி : 20.04.2021       

தோழர்களே..

வரலாற்று சாதனை படைத்திட்டோம்..

இந்திய நாட்டில் தொழிலாளி வர்க்கத்தை சுரண்டி கார்போரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கும் கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகின்றது அதன் தொடர்ச்சியாக BSNL நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களிடம் 18 மாத காலமாக வேலை வாங்கி விட்டு, (உழைப்பை உதிரத்தை உறிஞ்சிவிட்டு) சம்பளம் கொடுக்காமல் அடாவடியாக இழுத்தடித்தது BSNL நிறுவனம்.

இதை எதிர்த்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். மேலும் நீதி மன்றத்தில் நியாயம் வழங்க கோரி வழக்கும் தொடுத்தோம். நீதிமன்றம் நம்முடைய நியாயத்தை உணர்ந்து ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க உத்தரவிட்டது.. 

சம்பள உரிமையை மீட்டெடுத்துள்ளோம்..

பல மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்த ஒப்பந்த தொழிலாளிக்கு சம்பளம் பெற்று விட்டோம். 

முதல் கட்டமாக 1857 ஒப்பந்த தொழிலாளிக்கு 6.10 கோடி ரூபாயும், இரண்டாம் கட்டமாக 2902 ஒப்பந்த தொழிலாளிக்கு 8.40 கோடி ரூபாயும், மூன்றாவது கட்டமாக 4668 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20.47 கோடி ரூபாயும் ஆக மொத்தம் 34.98 கோடி ரூபாய் நீதி மன்ற உத்தரவு மூலம் பெற்றுள்ளோம். 

மொத்தத்தில் 4759 ஒப்பந்த தொழிலாளிகளுக்கு சுமார் 34.98 கோடி ரூபாயை ஒப்பந்தகாரர்களுக்கு பதிலாக மத்திய லேபர் அதிகாரிகள் மூலம் பெற்று சரித்திர சாதனை படைத்து விட்டோம்..

இது சாதாரண நிகழ்வு அல்ல..

தமிழகத்தின் அனைத்து தொழிற்சங்க வரலாற்றில் முக்கியமான சாதனை.. BSNL-லில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வெற்றி..

வழக்கு மன்றத்தில் நமக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் மரியாதைக்குரிய திரு N.G. R பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் சதீஸ்குமார், ராம் சித்தார்த் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்..

வாங்கிய சம்பளத்தில் உள்ள முரண்பாடு, EPF, ESI பிரசனை ஆகியவற்றை அடுத்து சரி செய்வோம்.

நாம் தோற்றதில்லை.. தோற்கப் போவதுமில்லை.

வாழ்த்துக்களுடன்

S. செல்லப்பா   

மாநிலத் தலைவர்    

A. பாபுராதாகிருஷ்ணன்

மாநிலச் செயலர்

BSNLEU

C. பழனிச்சாமி     

மாநிலத் தலைவர்

C. வினோத்குமார்

மாநிலச் செய்லர்

TNTCWU

குறிப்பு :

1) இன்று இரவு 8.30 மணி அளவில் ZOOM APP மூலம் அவசர விரிவடைந்த TNTCWU மாநிலச் செயற்குழு நடைபெறும். கிளைச் செயலர்களும் மாவட்டச் செய்லர்களும் மாநிலச் சங்க நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

2) 21.04.2021 சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்..

No comments:

Post a Comment