<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Sunday, 7 March 2021

 மாநில செய்திகள்

தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

REGD VDR 278        நாள்: 06.03.2021.

05.03.2021 அன்று காணொளி மூலம் நடைபெற்ற மாநிலச் செயற்குழு முடிவுகள்..

தோழர்களே..

                        மாநிலத் தலைவர் தோழர் C. பழனிச்சாமி தலைமையில் மாநிலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. BSNL ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் S.செல்லப்பா சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார். கூட்டத்தில் மாவட்டச் செயலர்களும் மாநில சங்க நிர்வாகிகளும் 26 தோழர்கள் கலந்து கொண்டனர்.

 DY.CLC சென்னை மூலம் சம்பளம் வழங்குவதில் பிரச்னை, நீதிமன்றத்தில் உள்ள தற்போதைய நிலைமை, பல்வேறு மாவட்டங்களில் ஆட்குறைப்பு பிரச்சனை, OUTSOURCING மூலம் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி, EPF, ESI அமுல்படுத்துதல், இறந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு EPF தொகை, EPF பென்சன், ESI மூலம் இறுதி சடங்கு தொகை போன்ற முக்கியமான பிரச்னைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன். குறிப்பாக சம்பள நிலுவையில் தற்போதைய நிலை சம்பந்தமாக மாநிலச் செயலர் தோழர் C.வினோத்குமார், தோழர் C.பழனிச்சாமி, தோழர் S.செல்லப்பா ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர். ஏற்கனவே 22.02.2021 அன்று சம்பள நிலுவை வழங்குதல் சம்பந்தமாக DY.CLC சென்னை அவர்களையும் நமது வழக்கறிஞரையும் நேரில் சந்தித்த விவரங்களை தலைவர் தோழர் C. பழனிச்சாமி விவரித்தார். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பாக்கி தொகை ரூபாய் 30 கோடி DY CLC சென்னை அவர்கள் வங்கி கணக்கில் இருக்கின்றது என்பதையும் அந்த தொகை மூலம் சம்பள பாக்கியில் கணிசமான தொகையை செலுத்தி விட முடியும் என்பதையும் விளக்கினார்.


விவாத்தைற்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள்..


1. அனைத்து மாவட்டங்களிலும் சம்பள பிரச்னைனைக்காக நாம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் உறுப்பினர்களிடம் கொண்டு செல்லவேண்டும். மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளுக்கு மாவட்டங்களில் BSNLEU உடன் கலந்தாலோசித்து தீர்வு காணவேண்டும். எனவே அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயற்குழு கூட்டம், சிறப்புக்கூட்டம் 10 தினங்களுக்குள் நடத்தப்படவேண்டும். அக்கூட்டங்களில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு உரிய ஆலோசனை வழங்குவர்..


2. உறுப்பினர் சந்தா வசூலை முடிக்க வேண்டும்..


3. அனைத்து மாவட்டங்களிலும் OUTSOURCING உட்பட அனைத்து வகை ஒப்பந்தகாரர் பட்டியல், ஒப்பந்த தொழிலாளர் பட்டியல், உறுப்பினர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்..


4. மறைந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு EPF தொகை, EPF பென்சன் , ESI மூலம் இறுதி சடங்கு தொகை பெற்றிட மாவட்டச் சங்கங்கள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


5. BSNLEU TNC சமூக வலைத்தள குழு மூலம் நடைபெறுகின்ற முக நூல் (FACE BOOK) சிறப்பு கூட்டங்களில் பெருமளவில் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்..


6. இன்றைய அரசியல் சூழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு தொழிலாளர் வர்க்கத்திற்கு விரோதமான அரசியல் கட்சிகளுக்கு நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.


இறுதியில் ,மாநில உதவிச் செயலர் தோழர் பாஸ்கர் நன்றியுரைக்குப் பின்னர் கூட்டம் நிறைவுற்றது.


செயற்குழு முடிவுகளை கறாராக அமுல்படுத்துவோம்..


தோழமையுடன், C.வினோத்குமார்.

No comments:

Post a Comment