மாநில செய்திகள்
குழப்பங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்…..
ஒப்பந்த தொழிலாளர் சம்பள பாக்கி சம்பந்தமாக நாம் வழக்கு தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் திரு N G R பிரசாத் மூலம் சரியான வழியில் பயணிக்கின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் சிலர் இந்த வழக்கில் தாங்கள் தான் எல்லாம் செய்ததைப்போல் குறுக்கு மறுக்கே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். .25 02 2021 அன்று நீதி மன்றம் ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளது.. முந்தைய நீதிபதி திரு சுரேஷ்குமார் அவர்கள் மூலமே தொடர்ந்து விசாரனை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு 09 01 2021 அன்று தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் திரு N G R பிரசாத் அவர்கள் மனு செய்துள்ளார்கள் என்று அந்த உத்தரவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே தேவையற்ற குழப்பங்களுக்கு நமது தோழர்கள் இடம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்

No comments:
Post a Comment