<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Thursday, 12 October 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் GM அலுவலகத்தில் 11-10-2017 அன்று BSNL ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் S.பால்ராஜ் பட்டுகுமார், TNTCWU மாவட்ட தலைவர் C.பன்னீர் செல்வம் அவர்களின் கூட்டுத் தலைமையில் மாலை நேர தர்ணா  நடைபெற்றது. BSNLEU மாவட்ட தலைவர் தலைமை உரை நிகழ்த்தினார். தர்ணா போராட்டம் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

நிகழ்வில் BSNLEU மாவட்டச் செயலர் தோழர் M.ஜெயமுருகன்
நமது சங்கங்களின் கோரிக்கைகளான 1.பிரதி மாதம் 7 ஆம் தேதி சம்பளம். 
2.குறைந்த பட்ச போனஸ் ரூபாய் 7000 
3. மாதம் தோறும் சம்பள பட்டியல் மற்றும் 
4. 20-05-2009 முதல் 30-11-2010 வரை உள்ள ஊதிய நிலுவைத் தொகை  உள்ளிட்டவைகளை விளக்கிப் பேசினார். TNTCWU மாவட்ட தலைவர் C.பன்னீர் செல்வம் அவர்கள் தர்ணா குறித்து விளக்கினார்.
ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் இ.ராதா கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இறுதியில் TNTCWU
GM (O) கிளைச் செயலர் ஜெயராஜ் நன்றி கூறினார். இரண்டு சங்கங்களின் சார்பில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
புகைப்படங்கள் பார்க்க >>Click Here<<