<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Thursday 1 June 2017

  T  N  T  C  W  U   திருச்சி 

                               01-06-2017 அன்று  திருச்சி சங்க  அலுவலகத்தில்  மாவட்ட  செயற்குழு  நடைப்பெற்றது . அதில் 9 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி  05-06-2017 அன்று  PGM  அலுவலகம்  முன்  மாலைநேர  தர்ணா இருப்பது  என  முடிவு  செய்யப்பட்டது . தோழர்கள்  05-06-2017 அன்று  PGM  அலுவலகம்  முன் 03.00 மணிக்கு  கூடவேண்டும் .
கோரிக்கைகள் ;~
1)  திருச்சி SSA வில் பணிபுரியும் ஹவுஸ் கீப்பிங் (HOUSE KEEPING ) ஊழியர்களுக்கு மீண்டும் 8 மணி  நேரம்  பணி உயர்த்தி கொடுக்கவேண்டும்
 2)   பிரதி மாதம் 7ஆம்  தேதிக்குள் ஊதியம் வழங்க்கவேண்டும்.

3)   புதிய உயர் ஊதியம் கேபிள் பகுதிக்கு உடனடியாக வழங்கவேண்டும்.
4)   19.1.2017 முதல் வழங்கவேண்டிய நிலுவை தொகை அனைவருக்கும் உடனடியாக வழங்கவேண்டும்.
5)  கேபிள் பகுதிக்கு பழைய முறையே (MAN POWER ) டெண்டரை அமுல்படுத்த வேண்டும் (மாநில கவுன்சில் உத்தரவை மாற்ற கூடாது )
6)   17 மாத நிலுவை தொகையை உடனே பட்டுவாடா செய்ய வேண்டும்.
7)  போனஸ் தொகை ரூ 7000/- வழங்க வேண்டும்,கடந்த ஆண்டு நிலுவை தொகையை வழங்கவேண்டும்.
8)   அனைவர்க்கும் WAGE SLIP வழங்கவேண்டும்.
9)   அனைவர்க்கும் IDENTITY CARD வழங்கவேண்டும்.