<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Friday 7 October 2016


உலக தொழிற்சங்க சம்மேளன மாநாடு உற்சாகமாக துவங்கியது

டர்பன், அக். 6-
உலக தொழிற்சங்கங்களின் சம்மேளன 17வது மாநாடு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் புதனன்று கோலாகலமாக துவங்கியது. சிஐடியுவின் அகில இந்திய துணைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் கே. ஹேமலதா மற்றும் ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் அமர்ஜித்கவுர் உள்ளிட்ட 45 தலைவர்களை கொண்ட தலைமைக்குழு அமைக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலுடன் மாநாடு நடைபெற்று வருகிறது.தென்ஆப்பிரிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பின் தலைவர் மாநாட்டில் பங்கேற்ற 1500 பிரதிநிதிகளை வரவேற்றார். தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். உலகமய கொள்கைகளினால் தென் ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் பற்றி விவரித்தார். மேலும் பிற நாடுகளுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும்வளர்ந்த நாடுகள் இந்த தொழிலாளர்களை நடத்தும் விதத்தை பற்றியும், உலகம் முழுவதும் உள்ள போரா டும் தொழிலாளர்களுக்கு தனது ஆதரவையும் உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் - இழப்பதற்கு அடிமைச் சங்கிலியை தவிர என்ற மாமேதை மார்க்சின்முழக்கத்துடன் மாநாட்டை துவக்கி வைத்தார். இதையடுத்து உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பொதுச்செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் அறிக்கை சமர்பித்தார். அவர் இணைக்கப்பட்ட சங்கங்களின் நடவடிக்கைகளை, குறிப்பாக, இந்திய நாட்டின்தொழிலாளி வர்க்கம் நடத்திய வரலாறு சிறப்புமிக்க அகிலஇந்திய வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட போராட்டங் களை பாராட்டினார். தொழிலாளர் மற்றும் விவசாயி களின் ஒற்றுமையின் அவசியத்தை விளக்கினார்.அதே போன்று உலகத்தில் உள்ள அனைத்து இளம் பெண்கள்மற்றும் இளம் தொழிலாளர்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.112 நாடுகள், 132 தொழிற்சங்கங்களிலிருந்து 340 பெண் பிரதிநிதிகள் உள்பட 1500 பிரதிநிதிகள்கலந்து கொண்டுள்ளனர். உலக சம்மேளனத்தின் துணைபொதுச் செயலாளர் ஸ்வதேஷ் தேவ்ராய்,கே.ஹேமலதா, ஆர்.சிங்காரவேலு, ஆர். முத்து சுந்தரம், ஏ.ஆர்.சிந்து, தீபக்தாஸ்குப்தா, எலமாரம்கரீம், கே.கே.திவாகரன், எஸ்.வரலட்சுமி, பி.என்.சௌத்ரி, அமிதவ குஹா, தீபஞ்சன் சக்ரவர்த்தி, கிரிராஜ் சிங், எஸ்.என்.ரெட்டி, எம்.எஸ்.ராஜா ஸ்ரீகுமார், நாகன், சூயி, பூஷன் படேல், அபிமன்யூ ஆகிய சிஐடியு தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.


நன்றி தீக்கதிர் 07-10-2016 மதுரைபதிப்பு பக்கம் 6