<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

Sunday 14 February 2016

நட்டத்திற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ராஜா
பிஎஸ்என்எல் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.அபின்யூ குற்றச்சாட்டு


வேலூர்,பிப்.13-
பிஎஸ்என்எல் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதற்கு முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஏ.ராஜா தான் காரணம் என பிஎஸ்என்எல் அகில இந்திய பொதுச் செயலாளர் பி. அபிமன்யூ குற்றம் சாட்டினார்.
வேலூரில் பிப்.12.13ம் தேதி பிஎஸ்என்எல் தமிழக விரிவடைந்த செயற் குழு கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி. அபிமன்யூ செய்திளார்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 ஆண்டுகாலமாக நஷ்டத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபத்தில் இயங்க செய்ய இதில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்,
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 2007 ஆம் ஆண்டில் 4 கோடிக்கு புதிய இயந்திரக் கருவிகளை வாங்க ஒப்பந்தத்தை நிறுவனம் கோரியதை மத்திய அமைச்சர் ராஜா ரத்து செய்தார். அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டில் 9 கோடிக்கான ஒப்பந்தத்தை ராஜா ஒத்துழைப்புடன் மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.
சீனாவில் குறைந்த ஒப்பந்தப் புள்ளியில் கருவிகளை வாங்கினால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து என்று கூறப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சீனாவில் இருந்துதான் கருவிகளை வாங்க அரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது,
இப்படி 6 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த பிஎஸ்என்எல் நிறுவனத்தை இன்முகத்துடன் சேவை என்ற புதிய திட்டத்தின் மூலம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த ஜீன்- ஜீலை மாதங்களில் 8 லட்சம் இணைப்புகளையும் , பின்னர் 16 லட்சம் , டிசம்பரில் 17 லட்சம், தற்போது 20 லட்சம் இணைப்பிகளைப் பெற்று வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
23 ஆயிரம் புதிய டவர்களையும் அமைத்ததோடு புதிய ஒப்பந்தத்தின் மூலம் தற்போது கருவிகள் வாங்கபட்டு வருகிறது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒன்றிணைந்து லாபம் ஈட்டும் முயற்சியில் செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டுமே அரசுக்கும் பொது மக்களுக்கும் முழு சேவையாற்றியது. தனியார் நிறுவனங்கள் அக்காலங்களில் செயல்படவில்லை. மத்திய அரசின் பொது துறை நிறுவனத்தை மீட்டு எடுக்கவும் அதை மீண்டும் லாபத்தில் இயங்க செய்தவதே எங்கள் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் பாபுராதா கிருஷ்ணன், மாவட்டத் தலைவர். தங்கவேலு, முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்,
                                                                                                                               நன்றி
Theekkathir