<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>


T N T C W  U
மாவட்ட செயற்குழு கூட்டம் 
திருச்சி மாவட்டம் VDR / 278

அன்பார்ந்த தோழர்களே,
                                                வணக்கம் , நமது மாவட்ட செயற்குழு கூட்டம் தோழர்.G.சுந்தர்ராஜ் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.

                                                நாள் : 07-04-2017 வெள்ளிக்கிழமை  மாலை 03-00

                                          
                                                இடம் : திருச்சி சங்க அலுவலகத்தில்


பங்கேற்பு  : TNTCWU திருச்சி மாவட்ட , மாநில சங்க நிர்வாகிகள் , செயற்குழு உறுப்பினர்கள் , கிளைச்செயலர்கள் மற்றும் அனைத்து செயல்வீரர்கள் .

அஜெண்டா  :
                                            1) என் உரிமை , என் சந்தா ,

                                            2)  ஏப்ரல் 15-ல் அனைத்து கிளைகள் தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது ,

                                            3)  6 மணி நேர பணியை 8 மணி நேர பணியாக மாற்ற BSNLEU சங்கத்தின் ஆலோசனையின் படி திட்டமிடுவது, PGM-யை சந்திப்பது , பலனில்லை எனில் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் ஒருங்கினைத்து ஆர்ப்பாட்டம் , தர்ணா , போராட்டம் நடத்துவது அதற்கும் பலனில்லை எனில் மாநில சங்கத்தினை அணுகுவது ,
  
                                             4) நடைப்பெற்று முடிந்த வழக்கில் விடுபட்ட மற்றும் சேர்க்கப்படாத ஒப்பந்த ஊழியர்களின் பெயர்களை சேகரித்து புதிய மறு வழக்கு தொடுக்க  முடிவெடுத்து தீர்மானமாக நிறைவேற்றி அதனை மாநில சங்கத்திற்கு அனுப்புவது,

                                            5) கேபிள் டெண்டரில் பில் முறையை நிரந்தரமாக தடை செய்வது  (தற்போது உள்ள முறையையே தொடர்வது )


                                             6)புதிய ஊதியம் அமுலாக்கம் ,

                                            7) கிளை பிரச்சினைகளை கிளைச்செயலர்கள் கடிதமாக எழுதி கொண்டுவரவும் ,

                                             8) தொழிற்சங்க வகுப்பு 

                                             9)  டவர் பழுது நீக்குவதில் நமது மாவட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை சரிசெய்ய திட்டமிடுவது ,

                                             10) நமது மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர் சங்கம் இல்லாத இடங்களில் கிளைகள் தொடங்குவது

                                             11)கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடு திட்டமிடல் 
   நமது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் , கிளைச்செயலர்கள் மற்றும் அனைத்து செயல்வீரர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டும்.

 தோழமையுடன் 
K.விஸ்வநாதன் 
மாவட்டச் செயலர் (பொ )